இராணுவ வீரர்கள்

        இராணுவ வீரர்கள்


     கொட்டும் பனியிலும்  
           மழையிலும்
கொடியை வணங்கி வாழ்ந்து..
   உறவுகளை மறந்து எல்லை 
           கடந்து கடமையை
                செய்து..
         தினமும் துப்பாக்கி 
   ஏந்தி எதிரிகளை எதிர்க்க 
            பயிற்சி செய்து..
   பாலைவனத்திலும் பதுங்கி ..
         இரவில் உறக்கத்தை
   துளைத்து அன்னியர்களை 
                    அழிக்க
    ஆயுதப் போராட்டம் நடத்தி.. 
            உயிரை தியாகம்
                    செய்து ..
  சில சமயங்களில் காயத்திற்கு
               மருந்தாக தாய்
              மண்ணை பூசி ..
சில நினைவுகள் மனதில் மறைந்து ..
            நாங்கள் போராடி
     உங்களை காப்பாற்றுகிறோம்.. 
           ஒரு நாள் என் மரணம்
      நிகழும் என்று தெரிந்தும்..
             தாய் நாட்டிற்காக 
           போராடுகிறோம்.. 
       என்று மகிழ்ச்சி தான் 
 மனதில் இருக்கும்..நாங்கள் உயிரை 
      பணயம் வைத்து வாழ்வதால் 
                       தான் ..
        நீங்கள் பயம் இல்லாமல்
                  வாழ்வீர்கள்
         என் உயிர் போனதும் ..
     எனக்கு அஞ்சலி செலுத்தும் 
        போது கலங்காதீர்கள்..
    நான் ஒன்றும் வாழ்க்கையை 
           வாழ பிடிக்காமல் 
             இறக்கவில்லை.. 
  அடுத்தவன் முன் உயிரை காக்க                              மன்றாடவில்லை ..
     போராடி என் தலைவர்களை 
     வணங்கி நான் இறந்தேன்.. 
என் நெஞ்சில் பதக்கங்கள் ஆயிரம்                  இருக்கும் ஆனால்  ஒருபோதும் 
    என் நெஞ்சில் பயம் இருக்காது 
               நான் இறந்தால்
      என் அடுத்த தலைமுறையே 
            இருக்கிறது....!!

Comments